க.பொ.த. (உ/த) பரீட்சை இன்று திங்கட்கிழமை (06) முதல் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்தார்.
இவ் உயர்தரப் பரீட்சையில் 2 இலட்சத்து 20 ஆயிரத்து 535 பாடசாலை பரீட்சார்த்திகளும் 15 அயிரத்து 239 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர். இவர்களுள் 41 ஆயிரத்து 323 பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளும் அடங்குவர். இதேவேளை கடந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் 355 பேரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களுக்கு அமைவாக அவர்களுக்கும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் 2093 நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன. இதன்படி புதிய பாடத்திட்டத்துக்கமைய ஆயிரத்து 746 பரீட்சை நிலையங்களும்
பழைய பாடத்திட்டத்துக்கமைய 347 பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளதெனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 289 இணைப்பு நிலையங்களுக்கூடாக பரீட்சைகள் கண்காணிக்கப்படுவதுடன் சுமார் 12 ஆயிரத்து 500 வரையிலான ஆசிரியர்கள் கண்காணிப்பாளராக ஈடுபடுத்தப்படுவரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இஸட் புள்ளி விவகாரத்தில் 2011 தோற்றிய மாணவர்களுக்கு அசாதாரணம் இழைக்கப்படவில்லை. மாணவர்கள் விரக்தியடைந்துள்ளனர் என்பதுடன் ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கின்ற உயர்தரப் பரீட்சை பிற்போடப்படமாட்டாது என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பழைய பாடத்திட்டத்துக்கமைய 347 பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ள தெனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் 289 இணைப்பு நிலையங்களுக்கூடாக பரீட்சைகள் கண் காணிக்கப்படுவதுடன் சுமார் 12 ஆயிரத்து 500 வரையிலான ஆசிரியர்கள் கண்காணிப் பாளராக ஈடுபடுத்தப்படுவரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இஸட் புள்ளி விவகாரத் தில் 2011 தோற்றிய மாணவர்களுக்கு அசாதாரணம் இழைக்கப்படவில்லை. மாணவர்கள் விரக்தியடைந்துள்ளனர் என்பதுடன் ஓகஸ்ட் மாதம் நடைபெற விருக்கின்ற உயர்தரப் பரீட்சை பிற்போடப் படமாட்டாது என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Thinakaran
Leave a comment