-MJ
லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் வார இறுதி நாளை முன்னிட்டு களைகட்டியிருக்கின்றது. கடந்த மாதம் தொடர் மழையைச் சந்தித்து வந்த பிரித்தாணியா, தற்பொழுது இதமான காலநிலையால் பிரகாசிக்கின்றது.
இதன் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு வீரர்களுக்கும் இப்போட்டிகளைக் கண்டுகளிப்பதற்காக வந்த வெளிநாட்டவர்களுக்கும் பிரித்தாணியாவின் தற்போதைய காலநிலை உகந்ததாகக் காணப்படுகின்றது.
போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று முன்தினம் வரை முதலாவது இடத்தில் இருந்துவந்த சீனா, 20 தங்கப் பதக்கங்களுடன் தற்பொழுது இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கின்றது. இரண்டாம் இடத்தில் இருந்துவந்த அமெரிக்கா தற்பொழுது 21 தங்கப்பதக்கங்களுடன் முதலாவது இடத்தில் இருக்கின்றது.
போட்டிகளை நடாத்திவரும் பிரித்தாணிய அதிரடி முன்னேற்றம் பெற்றுள்ளமை ஓர் விசேட அம்சமாகும். இந்தவகையில் 8 தங்கங்களைப் பெற்று 4வது இடத்தில் இருப்பதும் ஓர் விசேட அம்சமாகும். இதேபோல் சென்றமாதம் இடம்பெற்ற புகழ்பெற்ற விம்பிள்டன் ஆண்களுக்கான ஒற்றையர் சம்பியன்சிப் இறுதிப்போட்டியில், வெற்றிபெறுவார் என எதிர்பார்ப்புடன் இருந்து பின்னர் தோல்வியைத் தழுவிய ஸ்கொட்லாந்து வீரர் ‘அண்டி முரே’, தற்பொழுது ஒலிம்பிக் ஆண்களுக்கான ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருக்கின்றார். எனவே அண்டி முரே தங்கத்தை வெல்லலாம் எனும் மற்றுமொரு எதிர்பார்ப்பில் பிரித்தாணியர்கள் ஆவலாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நேற்று 03-08-2012 வெள்ளிக்கிழமை முடிவடைந்த போட்டிகளின் அடிப்படையில் நாடுகள் பின்வருமாறு நிழற்படுத்தப்பட்டிருக்கின்றன.
| Rank | Country | Total | |||
|---|---|---|---|---|---|
| 1 | 21 | 10 | 12 | 43 | |
| 2 | 20 | 13 | 9 | 42 | |
| 3 | 9 | 2 | 5 | 16 | |
| 4 | 8 | 6 | 8 | 22 | |
| 5 | 8 | 5 | 6 | 19 | |
| 6 | 5 | 9 | 6 | 20 | |
| 7 | 4 | 5 | 3 | 12 | |
| 8 | 4 | 0 | 1 | 5 | |
| 9 | 4 | 0 | 0 | 4 | |
| 10 | 3 | 12 | 8 | 23 |
Leave a comment