-MJ
நேற்று சனிக்கிழமை (04-08-2012) நிறைவடைந்த ஒலிம்பிக் போட்டிகளின் அடிப்படையில் ஒரே ஒரு தங்கப்பதக்க வித்தியாசத்தில் அமெரிக்கா முதலாமிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 26 தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ள அமெரிக்கா, மொத்தமாக 54 பதக்கங்களை இதுவரையில் பெற்றிருக்கின்றது.
இரண்டாமிடத்தில் சீனா 25 தங்கப்பதக்கங்களுடன் மொத்தமாக 53 பதக்கங்களைப் பெற்றிருக்கின்றது. அமெரிக்காவுக்கான சவால்களை சளைக்காது சீனா வெற்றிகளைத் தொடர்ந்த நிரூபித்து வருகின்றது. எனினும் சீன வீரர்களின் அதிகமான போட்டிகள் தற்பொழுது நிறைவடைந்திருக்கின்றன. மெய்வல்லுநர் போட்டிகளில் அமெரிக்காவின் ஆதிக்கமே மேலோங்கி வருவது திண்ணம்.
பிரித்தாணியா 14 தங்கங்களுடன் 3வது இடத்தில் முன்னேறி இருக்கின்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை முக்கிய மெய்வல்லுநர் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. உலகின் பிரபல்யமான மெய்வல்லுநர் வீரர்கள் ஒலிம்பிக் அரங்கை இன்று ‘கலக்க’ இருக்கின்றனர் என்பதும் விசேட அம்சமாகும்.
| Rank | Country | Total | |||
|---|---|---|---|---|---|
| 1 | 26 | 13 | 15 | 54 | |
| 2 | 25 | 16 | 12 | 53 | |
| 3 | 14 | 7 | 8 | 29 | |
| 4 | 9 | 3 | 5 | 17 | |
| 5 | 8 | 6 | 8 | 22 | |
| 6 | 5 | 10 | 6 | 21 | |
| 7 | 5 | 5 | 3 | 13 | |
| 8 | 5 | 0 | 0 | 5 | |
| 9 | 4 | 0 | 1 | 5 | |
| 10 | 3 | 15 | 10 | 28 |
Leave a comment