கபட நாடக ஆட்டமாம்; தாரை வார்க்கும் செயலாம்! ஆட்சியை தீர்மானிப்பது நாமே என்கிறார் ஹக்கீம்

மு.கா வின் எழுச்சியை பொறுக்க முடியாத சிலர் ஊடகங்களில் பிதற்றல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இந்த அரசை ஏமாற்றி கபட நாடகம் ஆடியே தனியாகப் போட்டியிட களமிறங் கியுள்ளதாக ஒருவர் ஊடகங்களுக்கு உளறுகின்றார். மஹிந்த ராஜபக்ஷவோடு ஒப்பந்தம் செய்து முஸ்லிம்களின் வாக்குகளை தாரை வார்ப்பதற்கே மு.கா தனித்துப் போட்டியிடுவதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.

மு.காவின் எழுச்சியைப் பொறுக்க மாட்டாத சக்திகளே இவ்வாறான கட்டுக்கதைகளைப் புனைந்து கதையளக்கின்றனரென மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று தமது ஆவேசத்தை வெளிப் படுத்தியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி மு.காவே இது ஊர்ஜிதப்படுத்தப்பட்டு விட்டது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? இணைந்து போட்டியிடுவதா? என்று முடிவெடுக்கும் விவகாரத்தில் கட்சிக்குள் பல்வேறு முரண்பாடுகள் தோன்றின. நாம் ஆளும் தரப்புடன் திறந்த மனதோடு பேச்சு நடத்தினோம். அந்தப் பேச்சு வார்த்தையின் போதும் அதன் பின்னரும் எமது கட் சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை களைவதற்கு நாம் மேற்கொண்ட பிரயத் தனங்களை வார்த்தைகளில் வடிக்க முடி¡து. ஆனால் அவை என்றோ ஒரு நாள் வரலாற்றில் பதியப்படலாம்.

முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கும் சோரம் போகாது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பதவி பட்டங்களுக்காக ஒரு போதும் சோரம் போகவும் மாட்டார். முஸ்லிம் காங்கிரஸிலிருந்து யாராவது பிரிந்து செல்வார்களாயின் அதற்குக் காரணம் அவர்கள் அமைச்சுப் பதவியைப் பெற்று சுகபோகத்தை அனுபவிப்பதற்காகத்தான். அதேபோன்று அமைச்சுப் பதவிகளுக்காக சிலர் கட்சி தொடங்குகின்றனர். மர்ஹ¥ம் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் இந்த வரலாறு தொடர்கதையாக நீண்டு செல் கின்றது. இந்த வரலாறு கிழக்குத் தேர்த லுக்குப் பின்னரும் தொடருமா என்ற கேள்வி எழுந்து நிற்கின்றது. அதற்கு நாம் சரியான அணையைக் கட்டுவோம் என் பதை மிகவும் ஆணித்தரமாகக் கூறுகின்றேன்.

நான் தோல்விகளுக்கு அஞ்சி தலைமைத் துவத்தை சுமந்தவனல்ல. தனித்துக் கள மிறங்குவதென்று எடுத்த முடிவு ஓர் அதிரடி முடிவு. மக்களின் விருப்பத்துக்கே தலைசாய்த்தோம். இது அரசியல் உயர் பீடம் எடுத்த முடிவு. இணைந்து போட்டி யிடுவதா? அல்லது தனித்துப் போட்டியிடு வதா? என்ற நிலையிலிருந்து எடுத்த முடிவு. இந்த அதிர்ச்சி வைத்தியத்தை செய்வதன் ஊடாக பல விடயங்களை வெளிக்காட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம். நாம் அரசுடன் நல்லுறவைப் பேணுகின் றோம். அதேவேளை எமது சமுதாயத்தின் நலனையொட்டிய முடிவுகளை உறுதியுடன் மேற்கொள்கின்றோம். நாங்கள் ஆட்சியைப் பலவீனப்படுத்துகின்ற, ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தவும் எங்களுக்கான உரிமைகளை வென்றெ டுக்கவும் தேர்தலைப் பயன்படுத்துவோம். எமது எழுச்சியை பொறுக்க முடியாத சக்திகளே பிதற்றுகின்றன. இவ்வாறு ஹக்கீம் தெரிவித்தார்.

–தினகரன்

 

 

 

Published by

Leave a comment