நான்கு வயது சிறுமி ஒருவர் கடலையை சாப்பிட்ட போது அந்தக்கடலை அந்தச்சிறுமியின் தொண்டையில் இறுகியதால் குறிப்பிட்ட சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பொகவந்தலாவையில் இன்று 4ஆம் திகதி இடம் பெற்றுள்ளது.
பொகவந்தலாவை ஸ்ரீபுர கிராமத்தினைச் சேர்ந்த இந்தச் சிறுமியின் பெற்றோர் நான்கு வயதான தமது பிள்ளைக்கு கடலை வாங்கி கொடுத்துள்ளார்கள்.
அந்தக்கடலையை சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமிக்குத் தீடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் அந்தச்சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச்சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
-adaderana
Leave a comment