-MJ
வாரஇறுதிநாளை (Weekend) முன்னிட்டு லண்டன் ஒலிம்பிக் அரங்கு ‘ஹவுஸ் புல்’ ஐ எட்டி இருக்கின்றது. இதற்கு மற்றுமொரு காரணம் மெய்வல்லுநர் போட்டி இடம்பெறவதாகும்.
அனைத்து ரசிகர்களையும் பல கோணங்களில் மகிழ்வித்துச் செல்லும் மெய்வல்லுநர் போட்டிகளை ஒரே குடையின் கீழ் ஒரே நாளில் பல போட்டிகளையும் அதன் சாதனைகளையும் வெற்றியாளர்களின் ஆனந்தங்களையும் காணக்கூடியதாக இருக்கும்.
ஓட்டப்போட்டி நடைபெற்று முடிந்தததும், ஈட்டி எரிதல் இடம்பெறும், இதற்கிடையில் பரிதிவட்டம் வீசுதல், உயரம், நீளம் பாய்தல், தடை தாண்டி ஓட்டம், விருது வழங்கள்…. இப்படியே பார்வையாளர்களை பல கோணங்களில் மகிழ்வித்துச் செல்லும் ஒலிம்பிக் போட்டிகளில் இதயமாகக் கருதப்படும் மெய்வல்லுநர் போட்டியின் ஆரம்பச்சுற்று மற்றும் இரண்டாம் சுற்றுக்கள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இறுதிச் சுற்றுக்கள் இன்றும் நாளையும் இடம்பெற இருக்கின்றன.
போட்டிகளை நடாத்தும் பிரித்தாணியா சற்று முன்னர் 3வது இடத்தில் முன்னேறி இருக்கின்றது. 10 தங்கங்களை பிரித்தாணியா இதுவரை வெற்றி பெற்றிருக்கின்றது. 23 தங்கங்களுடன் அமெரிக்கா முதலாவது இடத்திலும் 21 தங்கங்களுடன் சீனா 2வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
| Rank | Country | Total | |||
|---|---|---|---|---|---|
| 1 | 23 | 10 | 13 | 46 | |
| 2 | 21 | 16 | 10 | 47 | |
| 3 | 10 | 7 | 8 | 25 |

Leave a comment