மு. காங்கிரஸின் எழுச்சிப் பிரவாகத்தை அணைபோட்டுத் தடுக்க முடியாது: ஹக்கீம்

கிழக்கு மண்ணிலும் முஸ்லிம்களின் அரசியல் பிரவாகம் ஆரம்பமாகப் போகின்றது. அத்தகைய சூழ்நிலையில்தான் இந்த தேர்தலை நாங்கள் சந்திக்கின்றோம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் இயக்கத்தின் எழுச்சிப் பிரவாகத்தை அணைபோட்டுத் தடுக்க முடியாது என்பதனால் தடுமாறிப்போயிருக்கின்ற சிலர் மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட வெளிக்கிட்டு இருக்கின்றார்கள் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், மஹிந்த ராஜபக்~வோடு நான் ஒப்பந்தம் செய்து முஸ்லிம்களின் வாக்குகளை அவருக்குத் திரட்டிக்கொடுப்பதற்காக நாங்கள் தனித்துப்போட்டியிடுவதாக கூறுகின்றார். ஜனாதிபதிக்கு ஆதரவளித்து நான் முஸ்லிம் சமூகத்தை படுகுழியில் தள்ளப்போகிறேன் என அவர் கூறுகிறார். அவர்களுக்கு நான் பதில் கூறுவதற்கு அவர்கள் அறவே அருகதையற்றவர்கள். படித்த மக்கள் நிறைந்த அக்கறைப்பற்றில் அந்த நபர் இவ்வாறான கதைகளைக் கட்டவிழ்ப்பதால் அவர்கள் அவற்றை ஒரு போதும் நம்பப் போவதில்லை. இன்று அக்கரைப்பற்றில் அரசியல் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் மிகப்பெரிய மாற்றத்தை இந்தப் பிரதேசத்தில் கொண்டு வரப்போகின்றது. இது எந்த ஒரு தனிமனிதனுடையதும் கட்சியல்ல அமைச்சுப் பதவி வேண்டும் என்பதற்காக கட்சி தொடங்குகின்றார்கள். முழு அமைச்சுப் பதவி வேண்டுமென்றால் ஒரு கட்சி தேவை என்று எண்ணுகின்றார்கள்.

பெருந்தலைவர் அஷ்ரபின் மரணத்திற்குப் பிறகு 2000 ஆண்டிலிருந்து இந்த தலைமைத்துவத்திற்கான போட்டி ஆரம்பித்து விட்டது. அதே நிலைமையை இந்தத் தேர்தலின் பின்னும் தொடரலாமா என சிலர் நினைக்கின்றார்கள்.

இந்த தேர்தலுக்கு பின்னரான நிலைமையில் கட்சியை எவராவது தங்களுக்கு வேண்டியவாறு கையாள நினைத்தால் விளைவு விபரிதமாகி விடும். அடுத்த கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான்.

இது சமூகத்தின் இருப்பை பாதுகாக்கும் பணி. இதை யாரிடத்திலும், எந்த சக்தியிடத்திலும் அடகு வைத்து விட்டு இந்தக் கட்சியோடு யாரும் விளையாட முடியாது.

இதனை கட்சிக்குள்ளும், வெளியிலும் உள்ள எல்லோரும் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது மிகவும் நெருக்கடியான கால கட்டம். எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச வேண்டிய தேவையில்லை என நினைக்கின்றேன்.

பதவிகளுக்காக சோரம் போகிறவர்களாக எங்களை வெளியிலுள்ள பலர் பார்க்கின்றார்கள். நாங்கள் அவ்வாறு பதவிகளுக்கு சோரம்; போகிறவர்களாக இருந்தால், என்ன வந்தாலும் பரவாயில்லை என்று அரசாங்கத்தோடு இரண்டறக் கலந்து வெற்றிலைச் சின்னத்தில் சங்கமமாகியிருக்கலாம்.

அண்மையில் இங்கு பிரதேச சபைத் தேர்தல் நடந்த போதும் மிகத் திடகாத்திரமாகச் சொன்னோம். விட்டுக்கொடுப்பிற்கும் ஓர் எல்லையுண்டு. இந்த தேர்தலுக்கான விய+கங்களை வகுப்பதற்காக கட்சிப்பிரதிநிதிகளை பொத்துவிலுக்கு அழைத்து கலந்துரையாடினேன். எந்த அடிப்படையில் இந்தத் தேர்தலை சந்திப்பதென்ற விடயங்களை விரிவாக ஆராய்ந்தோம்.

ஆனால் அடிக்கடி பத்திரிகைகளில் கட்சியின் பிரதானிகள் வௌ;வேறு விதமாக கருத்துக்களைக் கூறுகின்றார்கள்.

நாங்களாகவே எங்களது கட்சியை தோற்கடிப்பதற்கான முயற்சிகள் அரங்கேறியுள்ளன. ஆனால் இந்த இயக்கத்திற்கு மக்களிடத்திலுள்ள பேரபிமானத்தின் காரணமாக அவர்களிடம் சென்று இந்தக் கட்சியை தோற்கடியுங்கள் என்று சொல்ல முடியாத நிலையிலிருக்கிறார்கள். இந்தக் கட்சியின் மரச்சின்னத்தின் மீதுள்ள பற்றை வைத்துத்தான் அவர்கள் அர்ப்பணிப்புடன் கட்சியை கட்டிக்காக்கின்றார்கள்.

எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் இந்த கிழக்கு மண்ணிலே பத்தாயிரம் பேருக்கும் அதிகமான ஒர் ஆளணியை திரட்டியாக வேண்டும். இந்தக்கட்சியின் செல்வாக்கையும், பலத்தையும் எல்லாத் தரப்பினருக்கும் புரிய வைக்க வேண்டும். இதனை எந்தவிதமான ஊடுருவல்களும் பிரித்துவிட முடியாது.

இந்தக் கட்சியின் அரசியல் பலம் இந்த அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்ல. முழுக்கிழக்கிலங்கையிலும், நாடு முழுவதிலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். அரசியல் அதிகாரம் எல்லா இடங்களுக்கும் பங்கிட்டு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

அட்டாளைச்சேனை என்ற இந்த கட்சியின் கோட்டையாக திகழுகின்ற மண்ணில் ஒரு திருப்பு முனையாய் இந்தத் தேர்தலை நாம் நோக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் விடுக்கின்றேன். கட்சியின் தலைவரை பணயக் கைதியாக வைத்து காரியங்களைச் சாதிக்கும் மனநிலை மாற வேண்டும். நான் இந்த முட்கிரீடத்தை பயந்து அஞ்சி தலையில் சுமந்தவன் அல்ல. சவால்களுக்கு முகம் கொடுத்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாறி,மாறி தேர்தலில் போட்டியிட்டு சமூகத்தின் ஒட்டு மொத்த நன்மையை நோக்கமாகக் கொண்டு வெற்றி பெற்றவன் என்றார்.

-வீரகேசரி

Published by

Leave a comment