லண்டன் ஒலிம்பிக் தரவரிசையும் சீனாவின் தொடர் வெற்றிகளைத் தாங்கமுடியாத மேற்கத்தேய ஊடக விமர்சணங்களும்!

-MJ

லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு 01-08-2012 புதன்கிழமையுடன் நிறைவடைந்த போட்டிகளின் அடிப்படையில் பின்வருமாறு நாடுகள் நிரற்படுத்தப்பட்டுள்ளன.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளை பாரியளவில் நடாத்திவரும் பிரிட்டன்  2 தங்கப்பதக்கங்களைப்பெற்று 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்று முன் இரவு பிரிட்டன் 21வது இடத்தில் இருந்தது. பெண்களுக்கான இரட்டையர் துடுப்புப்டகுப் போட்டியில் ஒரு தங்கமும், ஆண்களுக்கான வீதி துவிச்சக்கரவண்டி ஓட்டப்பந்தயத்தில் ஒரு தங்கமும் நேற்று பிரிட்டனுக்குக் கிடைத்தன. இதனால் லண்டன் நகரம் உட்பட பல நகரங்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தன.

இந்தவகையில் சீனா 17 தங்கம் உட்பட மொத்த பதக்கங்கள் 30 ஐப் பெற்று தொடர்ந்தும் முன்னணியில் இருக்கின்றன. 12 தங்கப் பதக்கங்களைப்பெற்று அமெரிக்கா 2வது இடத்தில் இருக்கின்றது. ஒரே ஒரு தங்கத்தை மாத்திரம் வென்ற 4 நாடுகள் 19வது இடத்தையும், ஒரே ஒரு வெள்ளியைப் பெற்ற 7 நாடுகள் 29வது இடத்தையும், ஒரே ஒரு வெண்களத்தை மாத்திரம் பெற்ற 10 நாடுகள் 39வது இடத்தையும் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வெற்றிக்கு ஈடுகொடுக்காத அமெரிக்காவும் அமெரிக்காவுக்கு நிழல் கொடுக்கும் ஊடகங்களும் சீன வீரர்களை போதைப்பொருள் அல்லது ஊக்கமருந்து விடயத்தில் இட்டுக்கட்டி செய்திகளை வெளிக்கொணர்ந்து வருகின்றன. சீனர்களின் வேகமும் விவேகமும் எதிர்தரப்பு வீரர்களை மாத்திரமன்றி, பார்வையாளர்களையும் திணரச் செய்கின்றன.

மகளிர், மற்றும் ஆடவர் உள்ளரங்க போட்டிகளில் சீனாவின் சாதனைகளே மேல் ஓங்கி இருக்கும். எனினும் போட்டியின் நிறைவாக இடம்பெறும் மெய்வல்லுநர் போட்டிகளில் அமெரிக்காவின் ஆதிக்கம் எப்போதும் போலவே இம்முறையும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக ஜாம்பவானாக எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவுக்கும், அதன் நிழல் நாடுகளுக்கும், மற்றும் இவர்களின் விசுவாசமான  ஊடகங்களுக்கும் சீனாவின் ஒவ்வொரு வெற்றியும் தாங்கிக்கொள்ள முடியாதவையாகவே இருக்கப்போகின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!.

Rank Country Gold Silver Bronze Total
1 China 17 9 4 30
2 United States 12 8 9 29
3 South Korea 6 2 4 12
4 France 5 3 5 13
5 North Korea 4 0 1 5
6 Germany 3 8 2 13
7 Italy 3 4 2 9
8 Kazakhstan 3 0 0 3
9 Japan 2 4 11 17
10 Russian Federation 2 4 5 11
11 Great Britain & N. Ireland 2 3 4 9
12 Hungary 2 1 1 4
13 Ukraine 2 0 4 6
14 South Africa 2 0 0 2

Published by

Leave a comment