50 சதவீத வீதி விளக்குகள் இன்று முதல் அணைக்கப்படும்!

இன்று முதலாம் திகதி முதல் நாட்டில் உள்ள வீதி விளக்குகளில் 50 சதவீதமானவற்றை அணைத்துவிட மின் சக்தி எரி சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர் மற்றும் பிரதிநிதிகளுடன்  மின் சக்தி எரி சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக நடத்திய விசேட கலந்துரையாடலில் இது பற்றித் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் இப்போது 8 லட்சம் வீதி விளக்குகள் எரிகின்றன. எனினும் இலங்கை மின்சார சபை மற்றும் லெகோ நிறுவனம் ஆகியன நாடு முழுவதிலும் 4 லட்சத்துக்கும் குறைவான வீதி விளக்குகளுக்கே சட்டரீதியான அனுமதி வழங்கியூள்ளன.

இப்போது நீர் மின்சார உற்பத்தி மிகவூம் குறைந்துள்ளதால் ஒரு வீதி விளக்கு எரிவதற்கு இலங்கை மின்சார சபை 150 ரூபாவை செலவிடவேண்டியூள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டே  இன்றுமுதல் நாடு முழுவதிலும் 50 சதவீத வீதி விளக்குகளை அணைத்துவிட அமைச்சு முடிவூ செய்துள்ளது.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment