யார் இந்த மர்மப்பெண்?

-MJ

பலத்த பாதுகாப்பு சவால்களைச் சந்தித்து, பல பில்லியன் பவுண்ஸ்களைச் செலவிட்டு அபாரமாக நடாத்திக்காட்டிய ‘லண்டன் ஒலிம்பிக் 2012’ ஆரம்ப நிகழ்வில் பிரித்தாணியா பாதுகாப்புக்கும் ஒலிம்பிக் உத்தியோகத்தர்களுக்கும் ஒரு சவால் மிக்க கேள்வி இன்று எழுந்திருக்கின்றது.

சென்ற வெள்ளிக்கிழமை லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெற்ற உலகைக் கவர்ந்த ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வின் நாடுகளின் அணிவரிசைகளும் இடம்பெற்றன. இந்தியாவைப் பிரகடணப்படுத்தும் முகமாக இந்திய வீரர்களின் அணிவரிசையும் இடம்பெற்றது.

இந்தியாவின் மல்யுத்த வீரர் சுசில் குமார் தனது நாட்டின் தேசியக் கொடியைத்தாங்கிய வன்னம் தலைமை தாங்கி வந்தார். இவருக்கு அருகில் ஓர் மர்மமான பெண் இந்திய வீரர்களின் அணியில் அதுவும் முன்வரிசையில் வந்தார். சிவப்பு நிற மேல் அங்கியும், இளநீல நீள் காற்சட்டையும் அணிந்த இப்பெண், முற்றிலும் வித்தியாசமாக தென்பட்டார். இந்திய வீராங்கனைகள் மஞ்சல் நிற சாரியும், நீல நிற மேல் அங்கியும் அணிந்து பிரிதிபளித்திருந்தனர். ஆனால் இக்குறித்த பெண், ஆடையில் வித்தியாசமாகவே இருந்தார். அடையாள அட்டை கூட அவர் அணிந்திருக்கவில்லை.

பல்லாயிரம் பாதுகாப்பு வீரர்களையும், ஒலிம்பிக் தொண்டர்களையும், உத்தியோகத்தர்களையும் நம்பி இடம்பெற்ற இந்நிகழ்வில் இப் பெண் எப்படி இந்திய அணிவரிசையில் நுழைந்தார்? இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதற்கு லண்டன் ஒலிம்பிக் சம்மேளனம் அதிருப்தி தெரிவித்திருக்கின்றது.

பார்வையாளராக அரங்கில் இருந்த இப்பெண்மணி தனது நாடு அணிவகுத்து வரும்போதே லாவகமாக அணிவகுப்புக்குள் நுழைந்திருந்தார். மைதானத்தைச் சுற்றி வேலியாக அமைக்கப்பட்டிருந்த தொண்டர்களுக்கு அல்வா கொடுத்து தனது நாட்டு வீரர்களின் முன்வரிசையில் வந்து கலந்திருந்தார்.

பத்து செக்கன்கள் வரை காண்பித்த இந்திய வீரர்களின் அணிவரிசை நிகழ்வை உலகின் பலகோடி மக்கள் பார்த்தனர். இதுவிடயமாக இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் உபதலைவர் ‘தாலோச்சன் சிங்க்’ சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி இருக்கின்றார்?

 ‘பத்து செக்கன்களில் இப்பெண்மணியால் நாங்கள் தலை குணிந்தோம்’ என பிரிகேடியர் முரலீதரன் ராஜா வருத்தம் தெரிவித்திருக்கின்றார். மேலும் ‘இது ஒரு மாறுபட்ட விசித்திரமான செயல் எனவும் இதற்காக தாங்கள் மன்னிப்புக் கோருவதாகவும்’ இந்தியா டைம்ஸ் இற்கு வழங்கிய பேட்டியில் ராஜா கூறியிருக்கிறார்.

இப்பெண்மணி பெங்களுரைச் சேர்ந்தவர் எனவும் இவர் ஓர் முதுகலை (Post Graduate) பட்டதாரி எனவும் இந்திய இணையத்தளங்கள் அறிவித்திருக்கின்றன.

இதுவிடயமாக லண்டன் ஒலிம்பிக் பாதுகாப்புக் குழுவினர் தற்பொழுது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Published by

Leave a comment