அடுத்த வருடத்துக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைக்காக தரமான துணிவகைகளை வழங்குவதற்காக இலங்கை சலுசலா நிறுவனம் கல்வி அமைச்சுக்கு கேள்வி மனுக்களை சமர்ப்பித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
2013ஆம் ஆண்டுக்காக பாடசாலை சீருடைக்கான துணிகளை கொள்வனவு செய்ய கல்வி அமைச்சு மூலம் விலை மனுக்கள் கோரப்பட்டிருந்தன.
2012ஆம் ஆண்டு அரசாங்கம் பாடசாலை சீருடைக்கான துணிகளை கொள்வனவு செய்ய 140மில்லியன் ரூபாவை செலவிட்டது.எனினும் அதைவிட குறைந்த விலையில் பாடசாலை சீருடைக்கான துணிவகைகளை வினியோகிக்க முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இம்முறை பாடசாலை சீருடைக்கான துணி விநியோகம் தொடர்பாக கல்வி அமைச்சினால் விலைமனுக்கள் கோரப்பட்டிருந்த போதிலும் இதற்காக விண்ணப்பித்த ஒரேயொரு அரச நிறுவனம் இலங்கை சலுசலா நிறுவனம் எனவும்
நீண்ட காலமாக சிறந்த ஆடைகளை வழங்குவதில் மக்களின் அபிமானத்தை வென்ற இந்நிறுவனம் பாடசாலை சீருடைக்கான துணி விநியோகம் தொடர்பாகவும் முன்வந்துள்ளமை கல்வி அமைச்சுக்கும் அரசாங்கத்துக்கும் பெரும் நன்மை பயக்கும் என்றும் மேற்படி நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
-அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment