போட்டிகள் நடைபெறும் அரங்குகளுக்கு ஊதுகுழல்களை எடுத்துச்செல்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தடைசெய்துள்ளது.
அரங்கிலுள்ள பார்வையாளர்களின் சௌகரியத்தையும் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்ட் இசைக்கருவிகளுக்கு இத்தடை விதிக்கப்படவில்லை எனவும் இவ்விதிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அரங்குகளில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சோதனைகளை மேற்கொள்வர் எனவும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
-Tamilmirror
Leave a comment