மூதூர் கடலில் மூழ்கி மூவர் மரணம்

மூதூர் கொட்டியாரக் குடாக் கடல் களப்பில் குளிக்கச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்கள்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழன் (26) மாலை 5.00 மணியளவில் இடம் பெற்றது. மூவரும் ஒன்றாகக் குளித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட நீர்ச்சுழியில் அகப்பட்டு இவர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் மூதூர் – ஜாயா வீதியைச் சேர்ந்த நசீர் – இர்பான் (வயது 17), லாபீர் – றிபான் (வயது 18), மூதூர் தள வைத்தியசாலையில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் மேற்பார்வையாளராகக் கடமையாற்றிய ஒரு குழந்தையின் தந்தையான ஜுனைட் ஸகி (வயது 28) ஆகியோராவர்.

இவர்களுள் ஜுனைட் ஸகியின் சடலம் வியாழன் மாலை 6.00 மணியளவில் மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஏனைய இருவரினதும் சடலங்களும் மீனவர்களின் உதவியுடன் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் மீட்கப்பட்டு வைத்தி யசாலையில் வைக்கப்பட்டு விசார ணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-Thinakaran

 

 

 

Published by

Leave a comment