-மிஸ்ஜா
நோன்பு
ஏழையின் பசி உணர்ந்து
படைத்தவனுக்காய் பசித்திருந்து
பகற்பொழுதில் தனைக்காத்ததால்
நாம் அடைந்திடுவோம்
‘பாபுர்ரையான்’ எனும் சுவனவாசலை!
ஸஹ்ர்
தூக்கத்தைக் கிழித்தெறிந்து
படுக்கையை விட்டெழுந்து
அல்லாஹ்வை நெருங்கிடத்தான்
எத்தனை ஆனந்தம் இந்நேரத்தில்
இப்தார்
உனை அடைவதற்குத்தான்
எத்தனை ஆயத்தங்கள்
ஒவ்வொரு இல்லங்களிலும்
லைலதுல் கத்ர்
ஆயிரம் இரவுகள்
நின்றுவணங்கிய நற்கூலிகளை
ஒரே இரவில் பெற்றிட
அருள்பொழியும் ஓர் இரவு
Leave a comment