காத்தான்குடியில் விசேட தேவையுடைய மாணவர்களின் விளையாட்டு

கிழக்கிலக்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பினால் நடாத்தப்படும் காத்தான்குடி ஸாஹிரா விசேட தேவையுடையோர் பாடசாலையின் மாணவர்களின் விளையாட்டுப் போட்டி 2012 மூன்றாம் தவணை ஆரம்பத்தில் நடைபெறவுள்ளதாக அமைப்பின் முகா மையாளர் எஸ். எச். எம். ஏ. இஸ்மாயில் தெரிவித்தார்.

இப்பாடசாலையில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய மாண வர்களின் விளையாட்டுப் போட்டிக்கான சகல ஏற்பாடுகளையும் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

இப்போட்டியில் குறுந்தூர ஓட்டங்கள், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், சுவட்டு விளையாட்டுக்கள் மற்றும் அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி, சங்கீதக்கதிரை போன்ற நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெறவுள்ளன.

தகவல்: தினகரன்

 

 

 

Published by

Leave a comment