– MMS
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஐ.தே.க. வேட்பாளர்களையும், மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.க. யின் உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.![batti_visit_ranil_005[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/batti_visit_ranil_0051.jpg?w=300&h=226)
ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான அரசரட்னம் சசிதரனின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளவுள்ள பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் றஹ்மான், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க, கொழும்பு மாநகர சபை மேயர் எ.ஜே.எம்.முஸம்மில், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பலத்த போட்டிகளுக்கிடையில் இடம்பெற இருக்கும் கிழக்குமாகாணசபைத் தேர்தல் மேடைகளுக்கு மீண்டும் மீண்டும் வந்து தங்களது ஆதரவாளர்களுக்கு உற்சாகமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
![batti_visit_ranil_002[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/batti_visit_ranil_0021.jpg?w=300&h=226)
Leave a comment