பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்!

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரப்பானி காஹர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொணடு எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி புதன்கிழமை இலங்கை வரவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் அழைப்பையேற்று இலங்கை வரும் இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முக்கிய அமைச்சர்களைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள்- பாதுகாப்பு- வர்த்தக நடவடிக்கைகள்- கலாச்சார நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

மூன்று தினங்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர்- சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் தெற்காசியாவில் இலங்கை – பாகிஸ்தான் உறவு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

-அரசாங்க தகவல் திணைக்களம்

 

 

 

Published by

Leave a comment