மின்வெட்டு இன்றுடன் நிறைவு!

-MMS

இவ்வாரம் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டுவந்த மின்வெட்டு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவுக்கு வருவதாக இலங்கை மின்சாரசபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

புத்தளம் அனல் மின் நிலைய இயந்திரக் கோளாறு திருத்தப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் 300 மெகாவோல்ட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.இரு பிரதான மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறினால் நாடு  முழுவதிலும் கடந்த சில தினங்களாக 3 மணி நேர மின்வெட்டு இடம்பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இரவுநேர மின்வெட்டால் ரமழானில் இரவுநேர வணக்கங்களில் சில சிக்கல்கள் இடம்பெற்றிருந்தன. எனினும் தற்பொழுது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக மின்சார சபையின் இவ் அறிவித்தல் மக்களிடத்தில் சென்றுள்ளது.

 

 

 

Published by

Leave a comment