மக்களின் அமோக ஆதரவுடன் ஐ. ம. சு. மு கிழக்கில் வெற்றியீட்டும்

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையை அரசாங்கம் வெற்றி கொள்வது உறுதியென பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்துக்கு நூற்றுக்கு நூறு வீதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்த பிரதியமைச்சர்; இம்முறை தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாகவும் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவிக்கையில்:-

கிழக்கு மாகாணத்தில் ஒருபோதுமில் லாதவாறு பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண் டுள்ளது. பெருமளவு வேலை வாய்ப்புக ளையும் வழங்கியுள்ளது.

எதிர்வரும் தேசத்துக்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு மட்டும் 5,000 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் கிழக்கு மக்கள் மனதில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதைக் குறிப்பிட முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எதற்கும் பிரயோசனமில்லாதவர்கள் என்ற மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால் அரசாங்கத்தின் மீது மக்கள் அதீத நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இம்முறை 14 பேர் தேர்தலில் களமிறங்குகின்றனர். இவர்கள் அனைவருமே மக்கள் அபிமானத்தைப் பெற்றவர்களாவர்.

மூன்று கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத் தும் 14 வேட்பாளர்களில் 5 முஸ்லிம்களும் மூன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரும் ஆறு ரி. எம். வி. பி. உறுப்பினர்களும் அடங்குகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் களமிறங்கும் மூவரும் கல்விமான்களும் சிறந்த மக்கள் சேவகர்களுமாவர்.

இதற்கிணங்க ருத்திரமலர் ஞானபாஸ்கரன் சிறந்த கல்விமானும் பாடசாலை அதிபருமாவார். இவருக்கு மக்கள் செல்வாக்கு மிகுந்து காணப்படுகிறது.

மட்டக்களப்பு நகர்ப்புறத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஹென்டி பிரேவோ நிறுத்தப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் சுமார் 50,000 கிறிஸ்தவ மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் சார்பிலேயே பிரேவோ நிறுத்தப்பட்டுள்ளார்.

மூன்றாமவர் ராஜன் மயில்வாகனம் அவர் சிறந்த அரசியல்வாதியும் கல்விமானுமாவார். மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர் என்ற நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். இவர்கள் மூவருமே சிறந்த மக்கள் சேவையாளர்களாவர்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்று அரசாங்கம் அமோக வெற்றிபெறுதில் எவ்வித சந்தேகமுமில்லை எனவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

–தினகரன்

 

 

 

Published by

Leave a comment