-அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தகவல்-
இசெட் புள்ளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:
பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்கைள ஒன்றிணைத்து தயாரித்து வெளியிடப்பட்ட இசெட் புள்ளிகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்தன. இந்த விவகாரத்தில் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தலைசாய்த்து புதிய இசெட் புள்ளிகளை வெளியிட்டுள்ளோம்.
பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். இது தொர்பில் பல்பலைக்கழக உபவேந்தர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகின்றது.
மூன்றாம் முறை பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு நான்காவது முறையூம் பரீட்சை எழுதும் சந்தர்ப்பம் வழங்க அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறவூள்ளோம். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் புதிய மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு உள்வாங்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
-அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment