கிழக்கு மாகாண தேர்தல்: மட். வேட்பாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல் கூட்டம்

எதிர்வரும் 2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு வேட்பாளர்களுக்கு தேர்தல் விதி முறைகளைத் தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி.பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட கூட்டத்தில் தேர்தல் செயலகத்தின் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹம்மட்,மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அஸங்க ரத்நாயக்க,மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவீந்திரவைத்தியலங்கார ,மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எஸ்.எம்.ஏ.சமரகோன் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் ,தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ,பொலிஸ் அதிகாரிகள் ,ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

-படங்களும் தகவலும் வீரகேசரி

 

 

 

Published by

Leave a comment