ஐ.ம.சு.முன்னணிக்கே அமோக வெற்றி! MLAM.ஹிஸ்புல்லாஹ்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம்திகதி நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறுமென சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மேற்படி மாகாண சபை தேர்தல் தொடர்பாக நேற்று மகாவலி கேந்திர நிலையத்தில் செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்றது.இம்மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இதனைத் தெரிவித்தார்.

கடந்த நான்காண்டுகளில் இப்பகுதிகள் பாரிய அபிவிருத்தியடைந்துள்ளன.மின்சாரம் வழங்கல்-பெருந்தெருக்களை புனரமைத்தல் மீனவத்துறை மற்றும் கைத்தொழில் துறைகளில் இப்பகுதி பாரிய நன்மையடைந்துள்ளதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

இவற்றைக்கருத்திற்கொண்டு நோக்கும் போது இப்பகுதி மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிப்பர் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment