ஐயாயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி!

நாடு முழுவதிலும் ஐயாயிரம் ஆரம்ப பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றை அபிவிருத்திச் செய்யும் திட்டம் ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து கல்வி அமைச்சு இத்திட்டத்தை செயல்படுத்தவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் ஒரு பிரதேசச் செயலகப்பிரிவில் மூன்று பாடசாலைகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பாடசாலைகளிலுள்ள அனைத்து குறைபாடுகளும் நீக்கப்பட்டு அவை அபிவிருத்திச் செய்யப்படும்

குறித்த பாடசாலைகளிகளுக்கு குடி நீர் வசதிகளை பெற்றுக் கொடுத்தல்- மின்சாரம் -மலசலகூட வசதி –பாடசாலைக் கட்டிட புனரமைப்பு -சிறுவர் விளையாட்டு மைதானம் புனரமைப்பு போன்றவை உத்தேச பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தில் உள்ளடக்கப்படும்.

இத்திட்டத்துக்கென ஒரு பாடசாலைக்கு ஐந்து லட்சம் ரூபா வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தப் பாடசாலைகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் ஒத்துழைப்பு பெறப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உத்தேச அபிவிரு;தித் திட்டம் குறித்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment