இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்த திரைமறைவு முயற்சி: மன்னார் ஜம்இய்யத்துல் உலமா

“கொடிய யுத்தம் அகன்று பயங்கரவாதம் அழிக்கப்பட்டு இன்று இனங்களுக் கிடையில் கசப்புணர்வுகள் நீங்கிச் செல்லும் வேளையில் மீண்டும் ஒரு குழப்பத்தைத் தோற்றுவிக்க திரைமறைவில் எடுக்கப்படும் முயற்சிகளைத் தோற்கடித்து ஒரே தேசத்தின் மக்களாக நாம் அனைவரும் வாழ சட்டத்தரணிகள் சங்கம் கவனம் செலுத்த வேண்டும்.” இவ்வாறு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மன்னார் கிளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வடக்கில் மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்த எமது முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் விரட்டப்பட்டு 23 வருடங்கள் கழிந்த நிலையில், தற்போது மீள்குடியேற வருகின்றனர். இந்த நிலையில் எமது மக்கள் பல் தேவைப் பாடுகள் உடையவர்களாக இருந்து வருகின்றனர்.

குறிப்பாக கடற்றொழிலை பிரதான தொழிலாகக் கொண்டவர்களாக மன்னார் உப்புக்குளம் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையிலும் விடத்தல் தீவிலிருந்து வந்த தமிழ் கத்தோலிக்க மீனவர்களுக்கு எமது முஸ்லிம்களின் மீனவத்துறையினை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தொழில்புரிவதற்கு சந்தர்ப்பம் வழங்கினோம். எமது முஸ்லிம்கள் மீண்டும் மீள்குடியேறும்போது இவர்கள் இவ்விடத்திலிருந்து செல்லவேண்டுமென்று அன்று புலிகளின் மன்னார் பொறுப் பாளராகவிருந்த அமுதன் என்பவரால் உடன்படிக்கையும் செய்யப்பட்டது.

இருந்த போதும், இன்றுவரை இந்த விடத்தில் தீவு கத்தோலிக்க மீனவர்கள், எமது முஸ்லிம் மீனவ சமூகத்துக்குச் சொந்தமான உப்புக்குளம் துறையினைக் கொடுக்காமல் இருக்கின்றனர். அரச அதிகாரிகள் உட்பட தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து இவர்களுக்குக் கூறியும் அது நடை பெறவில்லை.

எமது உரிமைகள் பறிக்கப்படும்போது இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் நியா யம்கோரி பல தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தபோதும் அது காத்திரமான பதிலைக் கொடுக்கவில்லை.

அதனால் வேதனையடைந்த எமது மக்கள் வீதியில் இறங்கி மிகவும் அமைதியாக எவ்வித வன்முறைகளும் இன்றி தமது கோரிக்கையினை முன்வைத்தனர்.

இதன்போது நீதிமன்றத்திலிருந்து தமது உத்தியோகபூர்வ ஆடையுடன் வெளியேவந்த மன்னார் நீதிபதி அவர்கள், எமது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு பொலிஸாரைப் பணித்ததன் பின்னர் மக்கள் அல்லோல கல்லோப்பட்ட நிலையில் சில அசம்பாவிதங்களில் ஈடுபட்டனர்.

இது எமது மக்களால் திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக் கப்பட்ட ஒன்றல்ல. அப்போது நீதிமன்றக் கட்டடத்துக்கும் சிறிய சேதம் ஏற்பட் டுள்ளதை அறிய முடிந்தது.

இந்த சம்ப வத்தை நாம் வன்மையாகக் கண்டிக் கின்றோம். தவறு செய்தவர்களுக்குச் சட்டம் தண்டனை வழங்கவேண்டும் என்பதில் நாம் மாற்றுக்கருத்துடன் இல்லை.

அதேபோன்று மன்னாரில் நடந்த சம்பவத்தை திரிபுபடுத்தி இந்தச் சம்பவத்தின் பின்னணியில் எமது வன்னி மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு எவ்வித பேதமும் இன்றிப் பணியாற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களை சம்பந்தப்படுத் தியுள்ளதை நாம் முற்றாக மறுக்கின்றோம். நடந்ததை சரியாக அறிந்துகொள்ளாமல் பிழையான தகவலின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படுவது எமது வடபுல முஸ்லிம்களுக்குச் செய்யும் இழப்பாகும்.

சட்டத்தை மக்களுக்காகச் செயற்படுத்தும் சபையின் சட்டத்தரணிகள் அமைப்பு எவ்வித இனத்துக்கும், மதத்துக்கும் சொந்தமானது அல்ல என்பதால் நீங்கள் நியாயத்தினையும், உண்மையின் தவல்களின் அடிப்படையில் செயற்படுவதனாலும் ஒரு தரப்பின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளித்து எமது முஸ்லிம்களுக்கும், எமது மக்களது விமோசனத்துக்கும் அயராது பாடுபடும் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக எடுக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதுடன் உண்மையினைக் கண்டறிய உங்களது உயர் சபையின் பிரதிநிதிகள் மன்னாருக்கு விஜயம் செய்து எமது மக்களுடன் கலந்துரையாடவேண்டும் என்பதையும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

-தினகரன்

 

 

 

Published by

Leave a comment