பிரதான பாதைகளில் எழுதுவதற்கு தடை!

தேர்தல் சின்னங்கள் – வேட்பாளர்களின் பெயர்கள்- இலக்கங்கள் ஆகியவற்றை வர்ணச் சாயங்கள் உபயோகித்து பிரதான பாதைகளில் எழுதுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதான பாதைகளில் சின்னங்கள்- பெயர்கள்- இலக்கங்கள் என்பவற்றை எழுதுவதற்காக உபயோகிக்கப்படும் வர்ணச் சாயங்களினால் வாகன விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இதன் விளைவாக உயிர்ச்சேதம் -பொருட் சேதம் ஏற்படுமென் பதனால் இது சட்டவிரோதச் செயலாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் இது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகவும் பெருந்தெருக்களை சேதப்படுத்துகின்ற செயலாகவும் கருதப்படுகிறது.

எனவே கிழக்கு சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் தேர்தலை முன்னிட்டு கட்சி மற்றும் குழுக்களின் இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

-அரசாங்க தகவல் ஊடகம்

Published by

Leave a comment