மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த 70 வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் 310 கிராம் நிறையில் எடை குறைந்த பாண் விற்பனை செய்தல், நிறுத்தல் அளத்தலுக்கு முத்திரையிடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகளைப் பாவித்தல், சரியான அளவைப்பயன்படுத்தாது வர்த்தகத்திலீடுபட்டுவந்த 40வர்த்தகர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அலகுகள் அளவீடுகள் மற்றும் நியனங்கள் சேவைகள் திணைக்கள பொறுப்பதிகாரி வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
கடந்த மூன்று நாட்களில் களுவாஞ்சிக்குடி, எருவில், மட்டக்களப்பு, ஆரையம்பதி உட்பட, மாவட்டத்தின் பல இடங்களில் பேக்கரிகள் ஹோட்டல்கள் நகை வர்த்தக நிலையங்கள் புடவைக்கடைகள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உட்பட பல வர்த்தக நிலையங்களில் இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
-adaderana
Leave a comment