சவூதி அரேபியா 200 தொன் பேரீத்தம்பழங்கள் அன்பளிப்பு

புனித ரமழானை முன்னிட்டு இலங்கையிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் விநியோகிக்கவென சவுதி அரேபியா அரசாங்கம் 200 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

இந்த பேரீச்சம்பழத் தொகை உள்ளூர் சவுதி தூதரகத்தில் நோன்பு ஆரம்பிப்பதற்கு முன்பே கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இவை உரிய காலத்தில் உரிய முறையில் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

குறிப்பாக கிழக்கில் தேர்தல் காலமாக இருப்பதால், அரசியல் தலையீடுகளின்றி அனைத்து முஸ்லீம்களுக்கும் பள்ளிவாயல் ஊடாக இப்பேரீத்தம் பழங்கள் கிடைப்பதற்கு பள்ளிவாயல்கள் நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும்.

 

 

 

Published by

Leave a comment