காத்தான்குடியில் வீடொன்று முற்றாக தீக்கிரை

மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று காலை வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் காத்தான்குடி-04 மரைக்கார் வீதியிலுள்ள வீடொன்று தீப்பற்றி எரிந்ததில் வீட்டின் உட்பகுதி முற்றாக எரிந்துள்ளதுடன் வீட்டிலிருந்த பொருட்களும் முற்றாக எரிந்து போயுள்ளன.

வீடு எரிந்து கொண்டிருந்த போது பொதுமக்களும் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசாரும் தீயை அணைத்துள்ளனர். இவ் வீடு தீப்பற்றியதற்கான காரணம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டு உரிமையாளர் ஒரு சாதாரன அரிசி ஆலையில் வேலை செய்பவர் என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

– படங்களும் தகவலும் வீரகேசரி

 

 

 

Published by

Leave a comment