அருள்மழை பொழியும் ரமழானே! (ரமழான் வாசகர் ஆக்கம்)

– ஷிபா

 

மாதங்களின் மகுடமாய்
மானிடர்களின் பாவங்களை
சுட்டெரிக்க வந்திடும் ரமழானே!
நீ வசந்தமாய் வந்திடு!

உன் வருகையால் எத்தனை ஆனந்தம்
இரவுகள் பகலாகி
வணக்கங்கள் அதிகமாகி
பள்ளிவாயல்களும் இல்லங்களும்
நோன்பாளிகளாலும் நல்லமல்களாலும்
ஒளிர்கின்றன! மிளிர்கின்றன!

தொலைக்காட்சிகளும்
தொடர்நாடகங்களும் ஒதுக்கப்பட்டு
தொழுகைகளை அதிகமாக்கி
அருள்மறையின் ஒலிகளில்
சுகம்காணும் ஓர் அற்புத மாதம்!

மறுமையின் மகிமை போற்றிடும்
மட்டில்லா ஒளி மாதமே!
ஆயிரம் இரவுகளின் மகிமைகளைக்கொன்ட
‘லைலத்துல் கத்ர்’ எனும் இரவை
எங்களுக்கு அருளிடு!
அருள்மழையில் நனைத்திடு!!
எங்களை அதன்பால் அனைத்திடு!!!

Published by

Leave a comment