இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகை தந்துள்ள இந்தியாயை எதிர்த்து, சொந்த மண்ணில் மற்றுமொரு சர்வதேச ஒருநாள் கிரிக்கட் தொடரை இலங்கை விளையாட இருக்கின்றது. கடந்த மாதம் பாகிஸ்தானுடன் விளையாடப்பட்ட ஒருநாள் தொடரை இலங்கை வெற்றி பெற்றிருந்தது யாவரும் அறிந்த விடயம்.
நடப்பு உலகக்கிண்ணச் சம்பியனான இ;ந்தியாவை எதிர்த்தாட இலங்கை தயாராகின்றது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி நாளை ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் பகல் 2:30 மணிக்கு நடைபெற இருக்கின்றது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் முதன் முதலாக 18-06-1979ல் இஙகிலாந்தின் மன்செஸ்டர் மைதானத்தில் சந்தித்தன. 1979ல் இடம்பெற்ற உலகக்கிண்ணப் போட்டியிலேயே இரு அணிகளும் விளையாடி இருந்தன. இப்போட்டியில் 47 ஓட்டங்களால் இலங்கை இந்தியாவை வெற்றி பெற்றிருந்தது ஓர் மகிழ்ச்சியான செய்தி!
இறுதியாக இரு அணிகளும் இவ்வருடம் பங்களாதேசில் நடைபெற்ற ஆசியக் கிண்ணப்போட்டியில் சந்தித்திருந்தன. 13-03-2012 அன்று டாக்கா வில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா 50 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. இவ் இரு அணிகளுமே ஆசியக் கிண்ண இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்ததும் ஞாபகமிருக்கலாம்!
இதுவரை இடம்பெற்ற 134 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இந்தியா 71 போட்டிகளிலும், இலங்கை 51 போட்டிகளிலும் வெற்றிபெற்றிருக்கின்றன. 11 போட்டிகள் வெற்றி தோல்வியின்றியும் ஒரு போட்டி சமநிலையிலும் முடிவடைந்திருக்கின்றன.
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தற்பொழுது ஸ்திரமான ஓர் அணியாக இந்தியா செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. எந்தவொரு ஓட்ட இலக்கையும் இலகுவாக வெற்றிபெறக்கூடிய சிறந்த துடுப்பாட்ட வரிசையை இந்தியா தன்னகத்தே கொன்டுள்ளதானது, இந்தியாவுக்குரிய தனிச் சிறப்பம்சமாக உள்ளது. இந்தியாவை வெற்றிபெற சிறந்த பந்து வீச்சு மற்றும் சிறந்;த களத்தடுப்பு இலங்கைக்கு மென்மேலும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும்!
![lasith-maling-vs-india[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/lasith-maling-vs-india1.jpg?w=530&h=398)
Leave a comment