-MMS
எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள கலைக்கப்பட்ட 3 மாகாணசபைகளுக்குமிடையிலான தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 21 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.
இன்று நண்பகலுடன் தாக்கல் செய்யப்பட்டு நிறைவடைந்துள்ள மனுக்களின்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உட்பட 13 அரசியல் கட்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதுடன 21 சயேட்சை குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment