மட்டக்களப்பில் வேட்புமனு தாக்கல் (படங்கள்)

-MMS

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.தங்கேஸ்வரியின் சுயேட்சைக்குழு உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்தனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி சுயேட்சைக்குழுவிலும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அதன் தலைமை வேட்பாளர் எம்.எம்அப்துர் றஹ்மான் ஆகியோர் சுயேட்சைக்குழுவிலும் தமது வேட்பு மனுக்களை மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கையளித்தனர்.

போன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் தாக்கல் செய்தனர்.

இதே போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம், தவிசாளர் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், தலைமை வேட்பாளர் நசிர் அகமட் உட்பட அதன் வேட்பாளர்கள் வேட்புமனுப்பத்திரத்தைத் தாக்கல் செய்தனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அதன் தலைமை வேட்பாளர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அரசரட்ணம் சசிதரன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.மாசிலாமணி ஆகியோரும் வேட்புமனுப் பத்திரத்தைத் தாக்கல் செய்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கான வேட்பு மனுவினை, செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், முன்னாள் அமைச்சரும் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபைத் தலைவருமான அமீர் அலி, உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று காலை 9 மணிக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை மட்டக்களப்பு மாவட்ட அணியின் தலைமை வேட்பாளர் க.துரைராசசிங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வேட்பு மனுவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதி செயலாளர் நாயகமுமான கி.துரைராசசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கே.கருணாகரம் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இறுதித்தினம் இன்றாகும். அந்தவகையில் பெரும்பான்மையான கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன.

 

 

 

Published by

Leave a comment