தேர்தல் வெற்றியுடன் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணையும் – கெஹலிய

-Adaderana

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல் வெற்றியின் பின் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணக்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தேர்தல் வெற்றியின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment