அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை நோன்பு நோற்கின்றனர்.

-MJ

இலங்கையிலும் சிலர் நோன்பு

நேற்று வியாழக்கிழமை (19-07-2012) கிழக்காசிய நாடுகளில் பிறை தென்பட்டு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் அநேகமான நாடுகளில் உள்ள முஸ்லீம்கள் இன்று வெள்ளிக்கிழமையிலிருந்து ரழழான் நோன்பை பிடித்து வருகின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள், தென்ஆபிரிக்கா நாடுகளிலும் மக்கள் நோன்பு நோற்றுள்ளனர். பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நோன்பு நோற்கத் தயாராகி வருகின்றனர். மேலும் அமெரிக்காவிலும்  கனடாவிலும் இன்று நோன்பு நோற்கின்றனர்.

இலங்கையிலும் சர்வதேசப் பிறையை அடிப்படையாகக் கொன்டு  நோன்பு நோற்பவர்கள் நோன்பு பிடித்துள்ளனர். இந்தவகையில் காத்தான்குடி, அக்கரைப்பற்று, மற்றும் தென்மாகானங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை சிலர் நோன்பு பிடித்திருக்கின்றனர்.

Published by

Leave a comment