தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளுக்கும் நேற்று 14 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 27 பேர் கட்டுப்பணம் செலுத் தியுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஒன்பது சுயேச்சைக் குழுக்களும் 05 கட்சிகளும் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
எக்சத் லங்கா மஹா சபாவ கட்சி பொலன்னறுவையிலும் கேகாலையிலும் வேட்பு மனுவை தாக்கல் செய்தது. மனுவை பெரமுன திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
மட்டக்களப்பில் நேற்று 02 சுயேச்சைக் குழுக்களும் அம்பாறையில் 04 சுயேச்சைக் குழுக்களும் இரத்தினபுரியில் 01 சுயேச்சைக் குழுவும் கேகாலையில் 01 சுயேட்சைக் குழுவுடன் அநுராதபுரத்தில் 01 சுயேச்சைக் குழுவும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தது.
இன்று 18 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்து வதற்கான கால அவகாசம் முடிவ டைகிறது.
நாளை 19 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்புமனு செய்யும் கால அவகாசம் முடிவடைகிறது.
நேற்றுடன் 65 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. 15 கட்சிகளும் 10 சுயேச்சைக் குழுக்களும் இதுவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-தினகரன்
Leave a comment