-MJ
லண்டனில் அடுத்தவாரம் இறுதியில் இடம்பெற இருக்கும் உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பாரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்தவகையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை ஏற்றிச் செல்வதற்கான விசேட போக்குவரத்து ஒழுங்குகளை இலண்டன் ஒலிம்பிக் சபை மேற்கொன்டு வருகின்றது. வீரர்களையும் அதிகாரிகளையும் குறித்த நேரத்துக்குள் விரைவாக அழைத்துச் செல்வதற்காக முக்கிய வீதிகளில் ‘ஒலிம்பிக் லேன்’ (OLYMPIC LANE) அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதன் ஊடாக ஒலிம்பிக் இலட்சணை அடையாளப்படுத்தப்பட்ட வாகனங்கள் மாத்திரமே செல்லும். இதனால் சாதாரண போக்குவரத்துக்கள் மென்மேலும் பாதிக்கப்படுவதாகவும் அதிக நேரம் காத்திருக்கவேண்டி இருப்பதாகவும் வாகனசாரதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.
இதுவரையில் லண்டன் உட்பட பிரித்தாணியாவின் அநேகமான நகரங்களில் ‘பஸ் லேன்’ (BUS LANE), மற்றும் ‘சைக்கிள் லேன்’ (CYCLE LANE) ஆகியன இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் நாட்டுமக்கள் ஆர்வமாக ஒலிம்பிக் போட்டிகளை வரவேற்க காத்திருக்கின்றனர்.
![games-lanes-olympics[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/games-lanes-olympics1.jpg?w=300&h=214)
Leave a comment