அஸாட் சாலிக்கு காத்தான்குடியில் ‘புகழிடம்’?

-SHM

ஓர் போராட்டம் போல் இடம்பெற இருக்கும் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள முடிவை பிரஜைகள் முன்னணி வரவேற்றுள்ளதுடன் அசாத் சாலி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் பிரஜைகள் முன்னணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமிற்கு நேரடியாகச் சென்று தமது வரவேற்பை தெரிவித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் முன்னிலையில் அசாத் சாலி வேட்பு மனுவில் கையொப்பம் இட்டுள்ளார்.

இந்நிலையில் ஊரில் முன்னாள் அரசியலில் ஈடுபட்டு, பின்னர் கலைந்து அங்குமிங்கும் வசித்துவந்தோரின் தயவுக்கு இணங்க அஸாட் சாலியை காத்தான்குடியில் தங்கவைத்து அவருக்கான தேர்தல் பிரசாரங்களையும் ஆதரவுகளையும் இத்தேர்தலில் வழங்கி, தாங்கள் தங்களின் பழைய அரசியலை மீண்டும் வெளிப்படுத்திக்காட்ட இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘வந்தோரை வாழ வைக்கும் மண்’ என்பது போல் காத்தான்குடி சுமார் 3 தசாப்தங்களுக்கு முன்னர் பத்யுத்தீன் மஹ்மூத் அவர்களுக்கு தேர்தல்களில் ஆதரவு அளித்து வந்தது. அதன் பின்னர் தற்பொழுது மேல்மாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட அசாட் சாலி அவர்களை அதிரடியாக களமிறங்கச் செய்ததானது, அவரது தனிப்பட்ட விருப்பமல்ல! எனினும் நீண்ட நாட்கள் பல பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஊர் பெரும்புள்ளிகளால் காய்நகர்த்தல்கள் நடந்துவந்ததாகவும், இறுதியில் அசாட் சாலி அவர்களை தேர்தலில் களமிறக்கி, தங்களது அரசியல் இருப்பிடத்ததை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அறியவருகிறது.

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஆர்மப உறுப்பினர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் என்று எத்தனையோ அரசியல் அனுபவமுள்ளவர்கள் இருந்தும் மேல் மாகாணத்தைச் சேர்ந்த அசாட் சாலி அவர்களை கிழக்கில் களமிறக்கியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

எனினும் வழமை போல் ஊரில் பெரும்பாண்மை ஆதரவு ஆதிக்கம் மேலோங்கும் என்பதால் சில மாற்று நடவடிக்கைகளையும் உயர் பாதுகாப்பு ஒழுங்குகளையும் ஆழமாக யோசித்து வருவதாகவும் மேலும் தெரியவருகிறது.

இப்போதுதானே ஆரம்பமே!

Published by

Leave a comment