மட்டக்களப்பு மாவட்டம் கடந்த ஐந்து வருட காலத்தில் வரலாறு காணாத வகையில் அபிவிருத்தியடைந்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மாவட் டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டும் கருத்தரங்கில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரதியமைச்சர் மேலும் கூறியதாவது:
மட்டக்களப்பு மாவட்;டத்தில் குறுகிய காலத்தில் 5400 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் 951 கோடி 60 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு மேலதிகமாக அடுத்த வருடத்துக்கான தேசத்துக்கு மகுடம் கண்காட்சி திட்டத்தின் கீழ் 300 கோடி ரூபாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்தி வேலைகளுக்காக வழங்கியுள்ளார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 100 கிலோ மீற்றர் நீளமான வீதிகளை காப்பற் வீதியாக மாற்றுவதற்கும் 550 கோடி ரூபாவை அரசாங்கம் வழங்கி யுள்ளது.
2013 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப் படவுள்ளது.
2013 ஆம் ஆண்டின் பின்னர் இம் மாவட்டத்தில் மின்சாரம் இல்லாத கிராமம் ஒன்றுகூட இருக்க மாட்டாது. இதற்காக 250 இலட்சம் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் சேதடைந்த 11 ஆயிரம் வீடுகளை புனரமைப்பதற்கு 600 கோடி ரூபாவை அரசாங்கம் கடந்த வருடத்தில் ஒதுக்கியது.
அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக 5 வருட காலத்துள் மட்டக்களப்பு மாவட் டம் அதீத வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த வருடத்தில் 232 மெட்ரிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. இம் மாவட்டத்தின் உணவுத் தேவை க்கு ஓர் இலட்சம் மெட்ரிக் தொன் போதுமானதாகும். இதன் காரணமாக நமது நாட்டின் அரிசித் தேவையில் 11 வீதத்தினை நாம் கடந்த வருடத்தில் வழங்கினோம்.
2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் 2 வீதத்தினையே வழங்க முடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மீன்பிடித் துறைமுகம் கூட இல்லாத நிலையில் மீன் உற்பத்தியும் கடந்த வருடத்தில் பல மடங்கு அதிகரித்தது. 2011 ஆம் ஆண்டில்தான் வாழைச்சேனையில் ஒரு மீன்பிடித் துறைமுகம் திறக்கப்பட்டது.
30 வருட காலமாக நிலவிய யுத்தத்துக்கு ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் முடிவு காணப்பட்டது. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் அபிவிருத்தியில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் எமக்கு பக்க பலமாக உள்ளனர்.
தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் சமமாக உள்ள ஒரே ஒரு மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும். மூவின மக்களும் சேர்ந்து மாகாண சபையை உருவாக்கினோம். ஏனைய மாகாண சபைகளுடன் ஒப்பிடுகையில் நாம் 25 வருடம் பின்தங்கியுள்ளோம்.
முதலமைச்சர் பதவிக்காக நாங்கள் பாரிய முரண்பாடுகளை எதிர்நோக்கவும் நேரிட்டது. மாகாண சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் போது தமிழ் – முஸ்லம் பிரச்சினை மட்டக்களப்பில் உச்ச கட்டத்தில் இருந்தது. தீ வைப்புச் சம்பவங்களும் இடம்பெற்றன. 8 பேர் கொல்லப்பட்டனர். எனினும் இதுவே கடைசி தமிழ் – முஸ்லிம் பிரச்சினையாக இருந்தது. அதன் பின்னர் கடந்த 5 ஆண்டு காலத்துள் எந்த ஒரு பிரச்சினையும் எழவில்லை.
கடத்தல்- கப்பம் கோருதல்- கொலை செய்தல் போன்ற வன்முறைச் சம்பவங்கள் எமது மாவட்டத்தில் இடம்பெறுவதில்லை. யாரும் எந்த நேரத்திலும் எங்கும் செல்லலாம். அரசியல் பாகுபாடு தலைதூக்காத வகையிலும் நாம் அரசியல் செய்கின்றோம். தற்போது மாகாண சபை தேர்தலை எதிர்நோக்கியுள்ளோம். இந்ததேர்தலின் போது ஒரு பொலிஸ் முறைப்பாடு கூட செய்யப்படாத வகையில் நடந்து கொள்வோம் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மீள்குடி யேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர் த்தி முரளிதரன்- அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் திட்ட மிட்டல் பணிப்பாளர் இரா. நெடுஞ் செழியன் ஆகியோர் மாவட்டத்தின் சார்பில் பங்குகொண்டனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் சார்பில் தேசிய தகவல் மத்திய நிலை யப் பணிப்பாளர் ஆரிய ரூபசிங்க அரசாங்க தகவல் திணைக்கள மேலதிக பணிப்பாளர் சந்திரபால லியனகே பிரதிப் பணிப்பாளர் ஏ. ஹில்மி மொக மட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.(
Leave a comment