மட்டக்களப்பு மாவட்டம் கடந்த ஐந்து வருட காலத்தில் வரலாறு காணாத வகையில் அபிவிருத்தியடைந்துள்ளது. இக்காலத் துள் 5400 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் 951 கோடி 60 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு மேலதிகமாக அடுத்த வருடத்துக்கான தேசத்துக்கு மகுடம் கண்காட்சி திட்டத்தின் கீழ் 300 கோடி ரூபாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்தி வேலைகளுக்காக வழங்கியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் அவர் என்னையும் பிரதியமைச்சர் முரளி தரனையும் கொழும்புக்கு அழைத்து இந்த நிதியைக் கையளித்தார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 100 கிலோ மீற்றர் நீளமான வீதிகளை காப்பற் வீதியாக மாற்றுவதற்கும் 550 கோடி ரூபாவை அரசாங்கம் வழங்கி யுள்ளது. இந்தத் தகவல்கள் மட்டக்கள ப்பு மாவட்ட அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினால் வெளியிடப்பட்டன.
அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மாவட் டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டும் கருத்தரங்கு கடந்த 13 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக மகா நாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மீள்குடி யேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர் த்தி முரளிதரன், அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் திட்ட மிட்டல் பணிப்பாளர் இரா. நெடுஞ் செழியன் ஆகியோர் மாவட்டத்தின் சார்பில் பங்குகொண்டனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் சார்பில் தேசிய தகவல் மத்திய நிலை யப் பணிப்பாளர் ஆரிய ரூபசிங்க அரசாங்க தகவல் திணைக்கள மேலதிக பணிப்பாளர் சந்திரபால லியனகே, பிரதிப் பணிப்பாளர் ஏ. ஹில்மி மொக மட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் உரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் கூறியதாவது, 2013 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப் படவுள்ளது.
2013 ஆம் ஆண்டின் பின்னர் இம் மாவட்டத்தில் மின்சாரம் இல்லாத கிராமம் ஒன்றுகூட இருக்க மாட்டாது. இதற்காக 250 இலட்சம் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் சேதடைந்த 11 ஆயிரம் வீடுகளை புனரமைப்பதற்கு 600 கோடி ரூபாவை அரசாங்கம் கடந்த வருடத் தில் ஒதுக்கியது.
அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக 5 வருட காலத்துள் மட்டக்களப்பு மாவட் டம் அதீத வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த வருடத்தில் 232 மெட்ரிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. இம் மாவட்டத்தின் உணவுத் தேவை க்கு ஓர் இலட்சம் மெட்ரிக் தொன் போதுமானதாகும். இதன் காரணமாக நமது நாட்டின் அரிசித் தேவையில் 11 வீதத்தினை நாம் கடந்த வருடத்தில் வழங்கினோம்.
2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் 2 வீதத்தினையே வழங்க முடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மீன்பிடித் துறைமுகம் கூட இல்லாத நிலையில் மீன் உற்பத்தியும் கடந்த வருடத்தில் பல மடங்கு அதிகரித்தது. 2011 ஆம் ஆண்டில்தான் வாழைச்சேனையில் ஒரு மீன்பிடித் துறைமுகம் திறக்கப்பட்டது.
30 வருட காலமாக நிலவிய யுத்தத்துக்கு ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் முடிவு காணப்பட்டது. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் அபிவிருத்தியில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் எமக்கு பக்க பலமாக உள்ளனர்.
தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் சமமாக உள்ள ஒரே ஒரு மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும். மூவின மக்களும் சேர்ந்து மாகாண சபையை உருவாக்கினோம். ஏனைய மாகாண சபைகளுடன் ஒப்பிடுகையில் நாம் 25 வருடம் பின்தங்கியுள்ளோம்.
முதலமைச்சர் பதவிக்காக நாங்கள் பாரிய முரண்பாடுகளை எதிர்நோக்கவும் நேரிட்டது. மாகாண சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் போது தமிழ் – முஸ்லம் பிரச்சினை மட்டக்களப்பில் உச்ச கட்டத்தில் இருந்தது. தீ வைப்புச் சம்பவங்களும் இடம்பெற்றன. 8 பேர் கொல்லப்பட்டனர். எனினும் இதுவே கடைசி தமிழ் – முஸ்லிம் பிரச்சினையாக இருந்தது. அதன் பின்னர் கடந்த 5 ஆண்டு காலத்துள் எந்த ஒரு பிரச்சினையும் எழவில்லை.
கடத்தல், கப்பம் கோருதல், கொலை செய்தல் போன்ற வன்முறைச் சம்பவங்கள் எமது மாவட்டத்தில் இடம்பெறுவதில்லை. யாரும் எந்த நேரத்திலும் எங்கும் செல்லலாம். அரசியல் பாகுபாடு தலைதூக்காத வகையிலும் நாம் அரசியல் செய்கின்றோம். தற்போது மாகாண சபை தேர்தலை எதிர்நோக்கியுள்ளோம். இந்ததேர்தலின் போது ஒரு பொலிஸ் முறைப்பாடு கூட செய்யப்படாத வகையில் நடந்து கொள்வோம்.
இவ்வாறு அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வி. முரளிதரன் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
‘இன்று ஒரு முக்கியமான நாள். முக்கியமான விடயம் பற்றி இன்று பேசுகின்றோம். 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது அதனால் 12 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை இழந்தோம். யுத்தம் மேலும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது.
இருப்பினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் மூன்று வருட காலத்துள் அனைத்து துறைகளையும் அபிவிருத்தி செய்தோம். விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து, கல்வி, கால்நடை, வாழ்வாதாரம் போன்ற சகல துறைகளும் பாரிய அளவில் அபிவிருத்தியடைந்துள்ளன. வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 3 வருடத்துள் 5 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் செலவிட்டு அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளபட்டன. தற்போது அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதற்காக 500 கோடி ரூபா எமது கையில் உள்ளது கல்வி, மின்சாரம், பாடசாலை, கணனி வசதி என்பனவற்றுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம்.
சுற்றுலாத்துறையும் பாரிய அபிவிருத்தி கண்டுள்ளது. சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் இம் மாவட்ட மக்களுக்கு போதிய வேலை வாய்ப்பும் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பும் கிடைத்துள்ளது.
யுத்தத்தினால் அழிவடைந்த பகுதிகளில் மட்டக்களப்பு ஒரு மாதிரி மாவட்டமாக மாறியுள்ளது. இதற்கு தேவையான வளங்களையும் வாய்ப்பு களையும் ஜனாதிபதி வழங்கினார். இன்னமும் வழங்கிக் கொண்டே உள்ளார். அமைச்சர் பசில் ராஜபக்ஷ வும் ஒத்துழைப்பு வழங்குகிறார்.
வாராவாரம் அமைச்சர்கள் இங்கு விஜயம் செய்து அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்கின்றனர். மூவின மக்களும் இங்கு இணைந்து பணியாற்றுகின்றனர். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாகுபாடு காட்டுவதில்லை.
இந்த மாவட்டம் படுவான்கரை, எழுவான்கரை என 2 பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றை இணைப்பதற்காக மண்முனை பாலம் கட்டப்பட்வுள்ளது. இதற்கு ஜப்பான் அரசு 160 கோடி ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. மட்டக்களப்பின் பொருளாதாரம் படுவான்கரையிலேயே உள்ளது. புதிய கல்லடிப் பாலத்தின் நிர்மாண வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பாலம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் திறந்து வைக்கப்படும். மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியில் உன்னிச்சை குடிநீர் விநியோகத் திட்டமும் ஒரு மைல்கல்’ என்றார்.
தேசிய தகவல் மத்திய நிலைய பணிப்பாளர் ஆரிய ரூபசிங்க கூறியதாவது, ‘தேசிய மற்றும் பிராந்திய அபிவிருத்தி பற்றி விளக்குவதற்கும் ஊக்குவிப்பதற்குமாக இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் பங்கு கொள்ள 65 ஊடகவியலாளர்களை அழைத்திருந்தோம். 62 பேர் சமுக மளித்துள்ளனர். இது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். கொழும்பில் இருந்தும் 25 பேர் வந்துள்ளனர். இது எதிர்காலத்தில் அபிவிருத்தி திட்டங்கள் பற்றி ஊடகவியலாளர் மத்தியில் மறுமலர்ச்சியையும் பாரிய மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கு சான்றாகவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மனித வளத்தில் மட்டுமன்றி பெளதிக வளமும் அபிவிருத்தி கண்டுள்ளது. இவற்றில் பாரிய மாற்றமும் ஏற்பட்டுள்ளது. பாசிக்குடா உல்லாச புரியாக மாறியுள்ளது. நெடுந்தூர காபட் வீதிகள் உன்னிச்சை குடிநீர் விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கிறது. வின்சன் மகளிர் கல்லூரியையும் பார்வையிட்டேன். இதுபோல வளர்ச்சியடைந்துள்ள ஒரு பாடசாலையை கொழும்பிலும் நான் காணவில்லை.’
இவ்வாறு ஆரிய ரூபவிங்க அவரின் உரையில் குறிப்பிட்டார்.
பிரதித் தகவல் பணிப்பாளர் ஏ. ஹில்மி முஹம்மத் பேசியதாவது,
‘அபிவிருத்தி பற்றி ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டுவதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும். அத்துடன் கண்காணிப்பு சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் அபிவிருத்தி வேலைகளைச் செய்யும் போது அவை பற்றி மக்களுக்கு சரியாக அறிவு ஊட்ட வேண்டும்.
நான் தினசரி 17 செய்தித் தாள்களை வாசிக்கின்றேன். இவற்றில் தமிழ் பத்திரிகைகளில் அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய விமர்சனங்களையே காண முடிகிறது. இவற்றை விடுத்து அபிவிருத்தி திட்டங்கள் பற்றி மக்களுக்கு அறிவூட்டும் வவகையில் எழுதப்பட வேண்டும். சரியான விளக்கங்களை மக்கள் முன்கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் பேசுகையில்,
‘யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் ஆகின்றன. மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் அபிவிருத்தி வேலைகள் நடைபெறுகின்றன. கிழக்கின் உதயம், கமநெகும, நெல்சிப் மீள் எழுச்சி போன்ற பல திட்டங்களின் மூலம் கிழக்கில் பாரிய அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகின்றன.
காலனித்துவ ஆட்சியின் பின் உன்னிச்சை குடிநீர் திட்டத்தின் மூலம் 37 வீதம் குடிநீர் தேவையும் 60 வீதமான மின்சார தேவையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. பாடசாலை வீதி, விளையாட்டு, மைதானம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. வெபர் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
டகவியலாளர்கள் சம்பவங்களை சரியாகவும் தெளிவாகவும் பாரபட்சமின்றியும் எடுத்துக் கூற வேண்டும். அரசியல் இன, மத, மொழி பாகுபாடுகளுக்கு அப்பால் பிரச்சினைகளை தெரியப்படுத்துங்கள். அப்போது மதிப்பீடு செய்யவும் திருத்திக்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்று குறுப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்கள மேலதிக பணிப்பாளர் சந்திரபால லியனகே பேசியதாவது,
அபிவிருத்தியில் ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியது. குடியேற்ற ஆட்சிக் காலத்திலும் அதன் பின்னரும் அனைவராலும் கவரப்பட்ட பிரதேசம் மட்டக்களப்பாகும். முன்னர் பாலங்கள் காபற் வீதிகள் என்பன இல்லை.
இதனால் வடக்கு கிழக்கில் பொருளாதாரம் அபிவிருத்தி அடையவில்லை. ஒரு சில பகுதிகளே அபிவிருத்தியடைந்தன. இது தேசிய பிரச்சினையாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் பிரச்சினை இருக்கவில்லை. கடந்த காலத்தில் விட்ட தவறுகளே பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்தன.
கிழக்கில் மூவின மக்களும் வாழ்கின்றனர். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்தி அபிவிருத்தியை முன்னெடுக்கும் ஜனாதிபதிக்கு நாம் நன்றியுடையவர்களாக வேண்டும். பல சிரமங்களுக்கு மத்தியிலும் ஊடகவியலாளர்கள் சேவை செய்துள்ளார்கள். முக்கியமான விடயங்களை நாம் மறந்துவிட்டு ஒரு மரணம் ஏற்பட்டால் அது பற்றியே எழுதுகின்றோம்.
அதனைவிட முக்கியமான விடயங்கள் பற்றி மக்களுக்கு சொல்ல வேண்டும். கிழக்கு மாகாணம் மீள் குடியேற்றத்துக்கு உதாரணமாக கொள்ளப்படுகின்றது. அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கிழக்கின் உதயம் திட்டம் இதற்கு காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கருத்தரங்கின் போதுகடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல துறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகள் அதனால் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி காட்சியளிப்பும் செய்யப்பட்டது.
ஒட்டு மொத்தத்தில் உள்ளூர் மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த ஊடகவியலாளர்களுக்கு இக் கருத்தரங்கு பயனுள்ளதாக அமைந்தது. இவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டமைக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை ஒரு ஊக்குவிப்பாகவும் அமைந்தது. இறுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கண்காணிப்பு சுற்றுலாவானது யுத்தம் முடிவடைந்த பின்னர் கிழக்கில் அரசு என்ன செய்துள்ளது என்பதை நாட்டின் பிற மாவட்டங்களில் மட்டுமன்றி சர்வதேசமே அறியவும் தெளிவு பெறவும் அரியதொரு வாய்ப்பாக அமைந்தது.
-thinakaran
Leave a comment