77 மேலதிக விமானங்கள் இணைப்பு
புனித றமழான் மாத காலத்தில் எமிரேட்ஸ் சவூதி அரேபியாவுக்கான அதன் விரிவான விமான சேவைகளுடன் மேலதிகமாக 77 விமானங்களை இணைத்துள்ளது.
இந்த மேலதிக சேவைகள் மூலம் ஜெத்தா மற்றும் மதீனா அல் முனவ்வரா நகரங்களே கூடுதல் நன்மை அடையவுள்ளன. சமய அடிப்படையிலான பிரயாணங்களை இந்தக் கால கட்டத்தில் மேற்கொள்ளும் பெருந்திரளான பக்தர்களின் நன்மை கருதியே இந்த சேவை இடம்பெறவுள்ளது. 2012 ஜுலை 20 முதல் செப்டம்பர் 01 வரை இந்த மேலதிக சேவைகள் இடம்பெறவுள்ளன.
“வருடாந்த யாத்திரிகைகளின் அடிப்படையில் புனித றமழான் மாத காலப் பகுதியில் சவூதி அரேபியாவுக்கான பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த அதிகரிப்புக்கு ஈடு கொடுக்கும் வகையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து எமது வாடிக்கையாளர்களுக்கு இலகுவான தெரிவுகளை மேற்கொள்ளக் கூடியதாக நாம் இந்த மேலதிக சேவைகளை இணைத்துள்ளோம்” என்று எமிரேட்ஸின் வளைகுடா மத்திய கிழக்கு மற்றும் ஈரானுக்கான வர்த்தக செயற்பாடுகளுக்கான சிரேஷ்ட உப தலைவர் அஹமட் கூறினார்.
றமழான் முழுவதும் ஜித்தாவில் இருந்தும் ஜித்தாவுக்கும் 59 மேலதிக விமானங்கள் சேவையில் ஈடுபடும். இதே காலப் பகுதியில் மதீனா அல் முனவ்வராவுக்கு 14 மேலதிக சேவைகள் இடம்பெறும்.
“எமது வழமையான வசதியான விமானத் தெரிவுகள் மூலம் சவூதிக்கு எமது வலையமைப்பின் மூலம் பயணம் செய்ய பல த்த கிராக்கி காணப்படுகின்றது. 175 விமானங்களைக் கொண்ட எமது அதிகரித்த விமான சேவையூடாக நாம் இந்த அதிகரித்த வாடிக்கையாளர் தேவைகளை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றோம்” என்று கூறி மேலும் கூறினார்.
போயிங் 777 மற்றும் ஏ 330 என்பன மூலம் மூன்று வகைப்படுத்தல் பிரிவுகளில் இந்த சேவைகள் வழங்கப்படவுள்ளன. எமிரேட்ஸ் சவூதியில் தற்போது ஜெத்தா, றியாத், தமாம், மதீனா ஆகிய இடங்களுக்கு சேவைகளை வழங்கியிருக்கின்றது.
உம்றா பயணிகளுக்கான இந்த விஷேட சேவைகளுக்கான அனுமதியை சவூதியிடமிருந்து எமிரேட்ஸ் ஏற்கனவே பெற்றுள்ளது.
–தினகரன்
Leave a comment