கிழக்குமாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டி

-MMS

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசுடன் இணைந்து ஜக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளது. பல நாட்கள், பல தீர்மானங்கள், பல ஆலோசனைகள் என்று இழுபறியில் இருந்த மு.கா.யின் முடிவு தற்பொழுது கிடைக்கப்பெற்றிருக்கின்றது. இதற்கிடையில் தமிழரசுக் கட்சியும் பல எதிர்பார்ப்புகளுடன் கிழக்குமாகாணசசபை தேர்தலில் மு.கா. யில் இணைந்து போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தன. 

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து பல தடவைகள் அரசுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுக்களை நடாத்தி வந்தது. எனினும் நேற்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சில நிபந்தனைகளை அரசுக்கு விதித்திருப்பதாகவும் அவை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மாத்திரமே கிழக்குமாகாணசபை தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவோம் எனவும், இல்லையேல் தனித்தே போட்டியிடுவோம் எனவும் சென்றவாரம் ஸ்ரீலங்கா மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment