இவ்வருட க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 277,097 பரீட்சாத்திகள்!

-MMS

இவ்வருட ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு லட்சத்து 77ஆயிரத்து 97 பேர் விண்ணப்பித்திருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்.என்.எம்.ஜே.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

பழைய பாடதிட்டத்தின் கீழ் 41, 323 பேரும் புதிய பாடதிட்டத்தின் கீழ் பாடசாலை மட்டத்தில் 220, 535 பேரும் இவ்வாறு விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை தனிப்பட்ட ரீதியில் 15, 239 பேரும் இப்பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Published by

Leave a comment