சரிந்துள்ள பாகிஸ்தான் அணிக்குள் மீண்டும் ரஸாக், அக்மல், இம்ரான் தெரிவு!
இந்தியாவை சந்திக்க இலங்கை சவால்?
நேற்று கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று, வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், போட்டி சமமானதால் இலங்கை 1:0 எனும் டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது.
2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இரு நாடுகளுக்குமிடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை 2:0 எனும் வெற்றியைப் பெற்றிருந்தது. முடிவடைந்த நேற்யை ஆட்டத்தில் பாகிஸ்தானை தோல்வியிலிருந்து காத்த இளம் வீரர் அசாட் சபீக் போட்டி நாயகனாகவும், இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான குமார் சங்கக்கார தொடரின் ஆட்ட நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில் சரிந்துகிடக்கும் பாகிஸ்தான் அணிக்குள் புதிய, பழைய வீரர்கள் 30 பேர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள ICC T20 உலகக் கிண்ணப் போட்டிக்குரிய பாகிஸ்தான் தெரிவு அணிக்குள் இவ்வீரர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுள் அண்மைக்காலமாக பல சர்ச்சைகளுக்குள் சிக்கி, அணியில் இருந்து நீக்கப்பட்ட அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கமறுன் அக்மல் மீண்டும் தெரிவுக்குள் இடம்பெற்றிருக்கின்றார். மேலும் சகலதுறை ஆட்ட வீரர் அப்துல் ரஸ்ஸாக் மற்றும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் இம்ரான் நஸீர் போன்றோரும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் இறுதி 15 பேர்களே தெரிவு செய்யப்படவுள்ளனர் என பாகிஸ்தான் கிரிக்கட்சபை அறிவித்துள்ளது.
பலமிக்க வலுவான அணியாக தன்னை மீண்டும் இலங்கை அணி நிரூபித்து இருக்கின்றது. புதிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களை மிக நிதானமாக பயன்படுத்தியிருப்பதாக அணித் தலைவர் மகேல மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு இருபது 20 போட்டியிலும் விளையாடுவதற்காக இலங்கை வருகின்றதுD. முதலாவது ஒரு நாள் சர்வதே போட்டி இம்மாதம் 12ம் திகதி சனிக்கிழமை பி.ப. 2:30 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இரவு பகல் ஆட்டமாக இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை-இந்திய தொடர் சம்பந்தமான விசேட ஆக்கம் பின்னர் வெளிவரும்.
![sangadraw_2789902[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/sangadraw_27899021.jpg?w=530&h=281)
Leave a comment