‘மாவட்ட அபிவிருத்தியில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு” என்ற தொனிப் பொருளில் அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள அம்மாவட்ட ஊடகவியலாளர் களுக்கான கருத்தரங்கு நாளை 13ஆம் திகதி மு.ப.9.00மணிக்கு மட்டக்களப்பு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
இக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்- மீள் குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் -கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர் பஷீர் சேகு தாவூத் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவிருக்கின்றனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தலைமையில் நடைபெறும் அக்கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து சிறப்புரை நிகழ்த்துவார் .
மேலதிக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே- தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரிய ரூபசிங்க- தகவல் பணிப்பாளர் வசந்தப்ரிய ராமநாயக்க ஆகியோரும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்வர்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இக்கருத்தரங்கில் கலந்துக் கொள்ள விருப்பதாக இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரான அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹில்மி மொஹமட் தெரிவித்தார்.
-அரசாங்க தகவல் ஊடகம்
Leave a comment