2013 தேசத்துக்கு மகுடம் – ஜுலை 16

2013ஆம் ஆண்டுக்கான தேசத்துக்கு மகுடம் வேலைத் திட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஆரம்ப நிகழ்ச்சி ஜுலை 16ஆம் திகதி மஹஒய அரலகம்வில நெடுஞ்சாலை அபிவிருத்திப் பணிகளுடன் ஆரம்பித்து வைக்கப்படும்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இந்த வைபவத்தில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரஞ்சித் சியலாப்பிட்டிய திட்டமிடல் அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக் கொள்வர்.

இதன்படி மஹஒய அரலகம்விலவில் 24 கிலோ மீட்டர் வரையிலான நெடுஞ்சாலை 250 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்படுமென அமைச்சர் ரஞ்சித் சியலாப் பிட்டிய தெரிவித்தார்.

அவ்வாறே அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

-அரசாங்க ஊடகப் பிரிவு

Published by

Leave a comment