-MMS
2012 இல் நாடு முழுவதமாக எடுக்கப்பட்ட இலங்கை சனத்தொகை புள்ளிவிபரங்கள் அண்மையில் இலங்கை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. இம்முறை வடக்கு மாணாணமும் புள்ளிவிபரக் கணிப்பில் உட்பட்டதால் ஓர் நிறைவான புள்ளிவிபரத்தை பெற முடிந்திருப்பதாக குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.இலங்கையில் சிங்கள மக்களின் சனத்தொகை 74.6 % எனவும், தமிழ் மக்களின் சனத்தொகை 11.2 % எனவும் முஸ்லிம் மக்களின் சனத்தொகை 9.3% எனவும், இந்திய தமிழ் மக்களின் சனத்தொகை 4 % எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ் அடிப்படையில் தமிழ் சமூகத்தின் வளர்ச்சி 3 வீதத்தால் வீழ்ச்சியடைந்திக்கின்றது. சிங்கள சமூகத்தின் வளர்ச்சியில் 0.6 வீத வளர்ச்சியும் காணப்படுகிறது.
உத்தியோகபூர்வமான புள்ளிவிபர அறிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
Leave a comment