சமூக ஒருமைப்பாட்டு வாரம் ஜுலை 16 முதல் 22வரை!

இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சு எதிர் வரும் ஜுலை 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை சமூக ஒருமைப்பாட்டு வாரமாக கொண்டாடவிருக்கிறது.

இந்த சமூக ஒருமைப்பாட்டு வாரத்தின் ஆரம்ப நிகழ்ச்சி ஜுலை 16ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறுமென தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் எஸ்.எல்.எம்.ஹாசீம் தெரிவித்தார்.

இந்த சமூக ஒருமைப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு நாடு முழுவதிலும் மாவட்ட ரீதியிலும் பிரதேச செயலக மட்டத்திலும் சட்ட ஆலோசனைகளை வழங்கும் நடமாடும் சேவைகளை நடத்தல் பாடசாலை மாணவர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிங்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் இன நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில்; திரைப்பட விழாவை மேற்படி வாரத்தில் நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இநத திரைப்பட விழாவில் சிங்கள் தமிழ் ஈரானிய மற்றும் பிரான்ஸ் திரைப்படங்களை முற்றிலும் இலவசமாக பார்வையிடலாம்.

அரச கரும மொழிகள் திணைக்களம் சிங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் அகராதி ஒன்றை வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உதவிச்செயலாளர் ஹாசீம் மேலும் தெரிவித்தார். இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலே அவர் இத்தகவலை தெரிவித்தார்.

Published by

Leave a comment