காத்தான்குடி அரசியற்களம்: 3 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தி பதிவு

-MMS

எதிர்வரும் கிழக்குமாகணசபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவர் நேற்று கட்டுப்பணம் செலுத்தி இருந்தனர். வழமையைவிட ஓர் தேர்தல் போரும் போட்டியும் இம்முறை காத்தான்குடியை ஆக்கிரமிக்கவுள்ளது.

மக்களின் சிந்தனையாளும் எழுச்சியினாலும் பல மாற்றங்கள் காத்தான்குடி அரசியலில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருவது கவனிக்கத்தக்கது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரண்டு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 3 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
காத்தான்குடி-2 N.M. ஜமால்தீன், புதிய காத்தான்குடியைச் சேர்ந்த M.T.மரிக்கார் தௌபீக் ஆகியோரே கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை காத்தான்குடி M.M.அப்துல் ரஹ்மான் சுயேட்சைக் குழுவுக்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், வேட்பு மனுத் தாக்கல் இம்மாதம் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையாகும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் 19ஆம் திகதி பகல் 12 மணிவரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment