ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் P.M.M.ஹம்ஸாவுக்கு பாராட்டுவைபவம் சம்மேளனத்தால் 29.06.2012 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து ஜாமியுழாபிரின் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் நடாத்தப்பட்டு அவ்வாறு இரண்டாவது பாராட்டு விழா 01.07.2012 ஞாயிற்றுக்கிழமை தலைவர் அல்ஹாஜ் மர்சூக் அஹமட் லெவ்வை அவர்களின் தலைமையில் சம்மேளன காரியாளயத்தில் நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்திலும் மேற்க்கொள்ளப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் P.M.M.ஹம்ஸா உரையாற்றும் போது எமது சமூகம் எம்முடைய பொருளாதார அமைப்பிற்கு ஒரு சிக்கலான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டுயிருக்கின்றது. விவசாய ரீதியாக இருந்த எமது பொருளாதார அமைப்பு இப்போது வர்த்தக ரீதியாக மாறி அது தொடர்ச்சியாக அதே நிலையில் செல்ல முடியுமா என்ற கேள்விக்குறியுடன் உள்ள நிலையில் நாம் நமது கல்வித் தரம் சம்மந்தமாக மாற்றிக்கொள்ள வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது. அந்த அடிப்படையில் நமது கல்வி அமைப்புக்கள் முழுமையாக இந்தநாட்டில் இருக்கின்ற இலவசக் கல்வியை பெற்றுக்கொள்கின்ற சமூகமாக இருக்கவேண்டும் என்றும்
உலகில் உள்ள நாடுகளில் விரல் விட்டு என்னக்கூடிய சில நாடுகள் மட்டுமே இலவசக் கல்வியைக் கொடுக்கின்றது. இதில் எமது நாடு ஆரம்பக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகங்கள் வரையிலான கல்வியை வழங்குகின்ற நாடு பல்வேறு பிரச்சினைகள், பொருளாதார கஸ்டங்கள் இருந்தாலும்கூட கல்வி என்று வருகின்றபோது அது எல்லோருக்கும் சமமாக இலவசமாக வழங்கப்படல் வேண்டும் என்பதில் எமது நாடு முதன்மையாக உள்ளது.
அண்மைக் காலமாக நான்அறிந்த கவலை தரும் விடயம் ஆரம்ப கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை திறமையாக செல்கின்ற மாணவர்கள் இலவசக் கல்வியிலிருந்து விலகிச் செல்கின்ற ஒரு கவலையைத் தருகின்ற விடயமாக உள்ளது என்றும் திறமையான மாணவர்கள் இலவசக்கல்வியில் இருந்து வெளிக் கல்விக்குச் செல்கின்றார்கள் இவ்வாறான நிலை தொடர்ந்து ஏற்பட்டால் எமது மண்ணில் பாரியதொரு பிரச்சினையை எமது சமூகம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் இவ்விடயத்தில் சம்மேளனம், அமைப்புக்கள் முதன்மைப்படுத்தி எடுக்குமானால் தான் இதற்காக உதவ முடியும் என்றும்தெரிவித்தார்.
-fkmmi.org
Leave a comment