மாகாணசபைத் தேர்தல்: மட்டக்களப்பு மாவட்டத்தில் 347,099 பேர் வாக்களிக்கத் தகுதி

-MMS

தற்பொழுது கலைக்கப்பட்டுள்ள சப்ரகமுவ,  வடமத்திய மற்றும் கிழக்கு ஆகிய மூன்று மாகாண  சபைகளுக்கும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் மொத்தம் 3,336,415 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதன்படி கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 347,099 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 441,287 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 245,363 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவ்வாறே வட மத்திய மாகாண சபைக்குட்பட்ட அனுராதபுரம் மாவட்டத்தில் 606,507 பேரும் பொலன்னறுவை மாவட்டத்தில் 29,4365 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

சப்ரகமுவ மாகாண சபைக்குட்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தில் 769,813 பேரும் கேகாலை மாவட்டத்தில் 631,981 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment